குழந்தைகள் தின விழா
கன்கார்டியா மேல்நிலைப் பள்ளி, பர்கூர்.
நாள்: 13.11.2026
இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, இன்று (13.11.2026) காலை 10.30 மணியளவில் கன்கார்டியா மேல்நிலைப் பள்ளி, பர்கூரில், குழந்தைகள் தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
தமிழக முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, மாணவர்களின் மகிழ்ச்சியையும் நலனையும் முன்னிறுத்தும் வகையில் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களுக்கும் சிறப்பு கேக் மற்றும் குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டன.
பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமையாசிரியர் திருமதி. I. குளோரி ரோலின் அவர்கள் வழிகாட்டுதலின்படி, இந்நிகழ்விற்குத் தலைமை ஏற்று, பள்ளியின் பொறுப்புத் தலைமை ஆசிரியர் திருமதி.E.செல்வக்குமாரி அவர்கள் விழாவைச் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தினார். பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு.V. அன்பு அவர்கள், செயலர் அருட்திரு. J.S.நோவானந்தம் அவர்கள் மற்றும் உறுப்பினர் திரு. T. ஜோனஸ் பிரபாகர் அவர்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு மாணவர்களுக்கு குழந்தைகள் தின வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
மேலும், குழந்தைகளே நாட்டின் எதிர்காலத் தூண்கள் என்றும், ஒவ்வொரு குழந்தையும் கல்வி, ஒழுக்கம், அன்பு, தன்னம்பிக்கை மற்றும் நல்ல பண்புகளுடன் வளர வேண்டும் என்றும்
தங்களது வாழ்த்துரையில் எடுத்துரைத்தனர். மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வளர்த்துக் கொண்டு, கல்வியில் சிறந்து விளங்கி, பொறுப்புள்ள நல்ல குடிமக்களாக உருவாக வேண்டும் என்றும் வாழ்த்தினர்.
மாணவர்களின் முகங்களில் மலர்ந்த மகிழ்ச்சியும், விழாவில் நிலவிய உற்சாகமான சூழலும் இந்நிகழ்வின் சிறப்பை மேலும் மெருகூட்டின.
குழந்தைகளின் மகிழ்ச்சியே சமூகத்தின் மகிழ்ச்சி; அவர்களின் சிறப்பான எதிர்காலமே நாட்டின் உயர்வுக்கான அடித்தளம் என்ற உயரிய நோக்கத்துடன் இக்குழந்தைகள் தின விழா இனிதே நிறைவுற்றது. இந்நிகழ்வு மாணவர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
நன்றி!











































